சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளது…லெக் பீஸ்

சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளது…லெக் பீஸ்
  • PublishedApril 1, 2025

யோகி பாபு நடிப்பில், ஸ்ரீநாத் இயக்கத்தில் கடந்த மார்ச் 7 அன்று திரையரங்கில் வெளியான படம் லெக் பீஸ். யோகி பாபுவுடன் சேர்த்து இந்த படத்தில் விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்தை ஹீரோ சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் மணிகண்டன் தயாரித்திருந்தார். கடந்த மார்ச் 7ம் அன்று வெளியான இந்தப்படம் விமர்சனத்தை பெற்று தோல்வி அடைந்தது.

காமெடி கலந்த கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் டெண்ட்கொட்டா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *