ரசிகனின் தேவையற்ற கேள்விக்கு சாத்தியமாக பதில் அளித்த மாளவிகா

ரசிகனின் தேவையற்ற கேள்விக்கு சாத்தியமாக பதில் அளித்த மாளவிகா
  • PublishedJune 19, 2025

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மெர்சல், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். நடிப்பை தாண்டி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி, கிளாமர் போட்டோஷூட் பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.

தற்போது கார்த்தியுடன் சர்தார் 2 படத்திலும் பிரபாஸின் தி ராஜாசாப் படத்திலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஹிருதயபூர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ஒரு ரசிகர் எல்லைமீறிய ஒரு கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

அந்த ரசிகர், ஒரு திரைப்பட ரசிகராக, போட்டோஷூட், மாடலிங் செய்யப்போடும் உழைப்பை நீங்கள் படங்களில் காட்டுவதில்லை என்று நினைக்கிறேன், அது தவறா சரியா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு மாளவிகா, தங்கலான் படத்தில் என் கதாபாத்திரத்திற்கு உடலை வருத்தி நான் போட்ட உழைப்பை நீங்கள் பார்க்கவில்லை என்றால் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் ஒரு ரசிகர் எப்போது திருமணம்? என்ற கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா, ஏன் நீங்கள் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறீர்கள் டா என்று பதிலளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *