ரஜினியின் அதிகபட்ச ஆசையே இதுதானா…அடடா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் 2026 ஜூன் மாதம் இப்படம் ரிலீஸ் ஆகும்.அந்தவகையில் ரஜினியின் ஆரம்பகாலக்கட்டத்தில் அவரின் அதிகபட்ச ஆசையாக இருந்த விசயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
ரஜினியின் அதிகபட்ச ஆசையாக இருந்தது, ஒரு வீடு, கார், ஸ்கூட்டர் போன்றவை சொந்தமாக வாங்கவேண்டும் என்பது தான். நடிக்க வந்த ஆரம்பத்தில் அவரின் வாழ்நாள் ஆசையாக இருந்து இந்த விஷயங்கள் தான். ஆனால் தற்போது ரஜினியின் சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கிறது.

50 ஆண்டுகாலமாக தன் மார்க்கெட்டை உயர்த்தி வரும் ரஜினி, 16 வயதினிலே படத்திற்காக ரூ. 3000 சம்பளமாக பெற்றிருக்கிறார். அப்போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த கமலுக்கு ரூ. 30000 சம்பளமும் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதேவிக்கு ரூ. 25000 சம்பளமும் வாங்கினர்.
அப்படி படிப்படியாக ரஜினி முன்னேறி பாசிட்டிவ், நெகட்டிவ் ரோலில் நடித்து தற்போது தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரியளவில் உயர்த்தியிருக்கிறார்.