ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்ப தெரியுமா?

ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்ப தெரியுமா?
  • PublishedApril 9, 2025

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. அவருடன் பூஜாஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. இப்படம் மே 1ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியான ‘கனிமா’ எனும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *