40 விபத்துகளுக்கு காரணமான அனுஷ்காவின் கவர்ச்சி போஸ்டர்…

40 விபத்துகளுக்கு காரணமான அனுஷ்காவின் கவர்ச்சி போஸ்டர்…
  • PublishedJune 7, 2025

ஓரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஜ்ஜியம் செய்த பிரபலம் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக வலம் வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் அருந்ததி. அதன் பின், மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக இருந்த அனுஷ்கா பாகுபலி படத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பெற்றார்.

ஆனால் இப்போது இவர் பெரிதாக படங்கள் நடிப்பது இல்லை. கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருந்த படம் வேதம் இந்த படம் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. அந்தப் படத்தில் அனுஷ்கா விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் அப்போது நடைபெற்ற சம்பவம் குறித்து பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” வேதம் படத்தின் விளம்பரத்துக்காக அனுஷ்காவின் ஒரு கிளாமர் புகைப்படத்தை ஹைதராபாத்தில் இருக்கும் பஞ்சகுட்டாவில் வைத்தோம். அப்போது அந்த போஸ்டரை ஓட்டுநர்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள்.

டிரைவர்கள் போஸ்டரைப் பார்ப்பதை நிறுத்த முடியாததால் 40க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்தன. போலீசார் அதை அகற்றுமாறு கூறினர். பிறகு நாங்கள் அதனை அகற்றினோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *