கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… சூர்யா மீது விழுந்த கேமரா! அதிர்ச்சி செய்தி

கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… சூர்யா மீது விழுந்த கேமரா! அதிர்ச்சி செய்தி
  • PublishedNovember 23, 2023

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேமரா அறுந்து நடிகர் சூர்யா தோளில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்று படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் என ஆரம்பிக்கப்பட்ட சூர்யாவின் முதல் 3டி படமான கங்குவா சமீபத்தில் 38 மொழிகளில் உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்த படத்துக்காக மதன் கார்கி தனி கடவுளையும், தனி உலகத்தையும் உருவாக்கி இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சூர்யா, திஷா பதானி நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள இவிபியில் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 11 மணியளவில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் போது திடீரென விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோப் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யாவின் தோள் பட்டையில் மோதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் இன்று ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நடிகர் சூர்யா சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் மலையாளத்தில் உருவாகி உள்ள காதல் தி கோர் திரைப்படம் நவம்பர் 23ம் தேதியான இன்று வெளியாகி உள்ள நிலையில், ஜோதிகா கேரளாவில் உள்ளார் என்றும் சூர்யாவுக்கு அடிபட்டதை அறிந்து சென்னை திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *