தக் லைஃப் ஷூட்டிங் சண்டை காட்சியில் விபத்து… நடிகருக்கு எலும்பு முறிந்தது!! பரபர தகவல்

தக் லைஃப் ஷூட்டிங் சண்டை காட்சியில் விபத்து… நடிகருக்கு எலும்பு முறிந்தது!! பரபர தகவல்
  • PublishedJune 13, 2024

கமல் ஹாசன் தற்போது மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.

தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்போது தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துவருவதாகவும்; முக்கியமான சண்டை காட்சி ஒன்று படமாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சண்டை காட்சியில் ஜோஜு ஜார்ஜ் கலந்துகொண்டார் என்றும்; அப்போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிந்துவிட்டது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *