சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு… லியோ ரிலீஸ் திகதியில் மாற்றம்? என்னடா சாமி இது…
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் லியோவும் ஒன்று. நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.
லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
லியோ படம் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. நடிகர் விஜய்யின் படங்களுக்கு மிகப்பெரிய புரமோஷனாக அமைவது அதன் ஆடியோ லாஞ்ச் தான்.
அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் லியோ படத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்காக சிலர் போலி டிக்கெட்டுகளை அடித்து வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து லியோ பட ஆடியோ லாஞ்ச் கேன்சல் செய்யப்பட்டது.
அதேபோல் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆன போது அதிகாலை காட்சியில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதோடு, இந்த கொண்டாட்டத்தின் போது லாரியில் இருந்து கீழே விழுந்து அஜித் ரசிகர் ஒருவர் மரணமடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்த அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
லியோ படத்திற்கு எப்படியாவது அதிகாலை காட்சிக்கு அனுமதி வாங்கிவிடலாம் என தயாரிப்பாளர் சங்கமும் முயன்று பார்த்தது, ஆனால் அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை ஈடுசெய்யும் விதமாக லியோ படத்திற்கு பிரீமியர் காட்சிகள் திரையிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஒருவேளை இந்த பிரீமியர் காட்சிக்கு அனுமதி கிடைத்தால் லியோ திரைப்படம் 19-ந் தேதிக்கு பதிலாக 18-ந் தேதி மாலையே ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.