தனுஷ் மகனுக்கு அபராதம்.. போக்குவரத்து காவல் துறை அதிரடி

தனுஷ் மகனுக்கு அபராதம்.. போக்குவரத்து காவல் துறை அதிரடி
  • PublishedNovember 18, 2023

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக தனுஷின் மூத்த மகனுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷுன் மூத்த மகன் யாத்ரா ஆர்15 பைக் ஓட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பதிவில் அவர் பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டுவது குற்றம் என்றும், உங்க வீட்லயே சிஸடம் சரி இல்லை என்றும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

நெட்டிசன்களின் தொடர் பதிவால் நேற்றிரவு போக்குவரத்து போலீசார் சென்றுள்ளனர். அந்த வீடியோவில் பைக் ஓட்டும் இளைஞர் மாஸ்க் அணிந்து இருந்ததால்,அது யார் என்று சரியாக தெரியவில்லை என்றனர்.

மேலும், விலை உயர்த்த வாகனத்தை ஓட்டியது யாத்ரா தான் என்பது தெரியவந்தால் அவர் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.

வாகனம் ஓட்டியது யாத்ரா என்பது உறுதியானதால், போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்துத் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *