Thug Life; நாளை துவங்கும் சூட்டிங்.. தயாரான கமல்ஹாசன் – ஜெயம்ரவி
நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய KH234 படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
இந்த படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட நிலையில் படக்குழுவினர் தற்போது செர்பியாவில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நாளை முதல் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
இந்தப் படத்திற்காக தற்போது கமல்ஹாசன் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக லோக்சபா தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள நிலையிலும் அவர் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக செர்பியா செல்லவுள்ளார்.
படத்தில் நடிகர் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா உள்ளிட்டவர்கள் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க கமிட் ஆகியுள்ளனர். படத்திற்காக ஜெயம்ரவி 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணி தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது.
முன்னதாக மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் சூட்டிங் செர்பியாவின் பனிபடர்ந்த இடங்களில் நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த இடத்தை தன்னுடைய தக் லைஃப் படத்திற்காக மணிரத்னம் தேர்ந்தெடுத்துள்ளார்.
காஷ்மீரை நினைவுப்படுத்தும் இந்த இடத்தின் பல அழகான லொகேஷன்களில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கென முன்னதாகவே லொகேஷன்களை பார்ப்பதற்காக மணிரத்னம் சென்றிருந்தார். அதன் புகைப்படங்களும் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.