பிரபல நடிகர் மதன் பாபு காலமானார்

பிரபல நடிகர் மதன் பாபு காலமானார்
  • PublishedAugust 2, 2025

பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாபு காலமானார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாபு, தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாபு, அதற்காக சிகிச்சை பெற்று மீண்டதாக கூறப்படும் நிலையில், இன்று மாலை 5 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

மதன் பாப்பின் உடல், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *