இலங்கை வந்தார் நடிகர் பிரபுதேவா… வைரலாகும் புகைப்படம்

இலங்கை வந்தார் நடிகர் பிரபுதேவா… வைரலாகும் புகைப்படம்
  • PublishedSeptember 15, 2023

நடனம், இயக்கம் மற்றும் நடிப்பு எனப் பலதுறைகளில் கலக்கும் இந்திய திரைப்படக் கலைஞரான பிரபுதேவா, சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.

புதிய திரைப்படமொன்றின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காக பிரபுதேவா இலங்கை விஜயம் செய்துள்ளார்.

இவர் இலங்கை வந்தவுடன், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் முகப்புத்தகத்தில் இவருடைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *