இயக்குனர் ஹரி உடன் நடிகர் பிரசாந்த் கூட்டணி

நடிகர் பிரசாந்த் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்த நிலையில் சமீபத்தில் GOAT மற்றும் அந்தகன் படம் ரிலீஸ் ஆகி அவருக்கு கம்பேக் கொடுத்தது.
அடுத்து பிரசாந்த் ஹீரோவாக தொடர்ந்து படங்கள் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு எதுவும் பல மாதங்களாக வராமல் இருந்தது.
இந்நிலையில் பிரசாந்த் அடுத்து இயக்குனர் ஹரி உடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
மேலும் ஹீரோயினாக இளம் சென்சேஷன் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
ஏப்ரல் 6, பிரசாந்த் பிறந்தநாள் அன்று இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.