“சிம்பு வந்தால் நாங்கள் வரமாட்டோம்” ஜெயம் ரவி, விக்ரமின் உண்மை முகம் வெளியானது….

“சிம்பு வந்தால் நாங்கள் வரமாட்டோம்” ஜெயம் ரவி, விக்ரமின் உண்மை முகம் வெளியானது….
  • PublishedMay 18, 2023

நடிகர் சிம்புவுக்கு விக்ரமும், ஜெயம் ரவியும் துரொகம் செய்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

“பொன்னியின் செல்வன் படத்தில் என்னை கூப்பிட்டு மூன்று கேரக்டர்களில் எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக்கோ என்றார். ஆனால் விக்ரமும், ஜெயம் ரவியும் மணி சாரிடம் இந்தப் படத்துக்குள் சிம்பு வந்தால் நாங்கள் வரமாட்டோம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்கள். நானும் எதற்குப் பிரச்னை என்று விலகிவிட்டேன்” என கூறினாராம்.

முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாக ப்ரோமோஷனின்போது ஜெயம் ரவியிடம் பத்திரிகையாளர்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதனை ரவி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

ஆனால் இப்போது சிம்புவே தன்னிடம் அப்படி கூறியதாக சொல்லியிருப்பது கோலிவுட்டில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், துரோகம் நடந்ததை தெரிந்துகொண்டாலும் அந்தப் படத்தின் விழாவுக்கு வந்து தான் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை எங்கள் STR காட்டிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, நடனம் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் ஃப்ரீ ஹிட்டாக சிக்ஸ் அடிப்பவர்.

எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்துகொண்டிருந்தன. அவரை சூழ்ந்த பிரச்னை காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எனவே உடல் எடை கூடி மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்.

ஆனால் தற்போது, உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்பு.

மாநாடு, வெந்து தணிந்தது காடு என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் மீண்டும் பழைய சிம்பு வந்துவிட்டார் என உற்சாகமடைந்தனர். தொடர்ந்து இரண்டு ஹிட்டுகளை கொடுத்த சிம்பு பத்து தல படத்தில் சறுக்கினார். இருப்பினும் சிம்புவும் ஃபெர்பார்மன்ஸ் அட்டகாசமாக இருந்தது.

பத்து தல படத்தை முடித்த சிலம்பரசன் அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இது அவரது கரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமையும் என கருதப்படுகிறது.

இதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டுவரும் சிம்பு இப்போது லண்டனில் இருக்கிறார். அங்கு இந்த படத்துக்கு தொடர்பாக ஒரு பயிற்சியில் இருக்கிறாராம். இதற்கு அடுத்து வெந்து தணிந்தது காடு 2 படத்தில் நடிக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *