முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் நித்தியா மேனன்!

முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் நித்தியா மேனன்!
  • PublishedMay 18, 2023

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். வணக்கம் சென்னை திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான இவர் , பின் காளி என்ற திரைப்படத்தையும், வெப் தொடர் ஒன்றையும் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகரான ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம்.

இந்த படத்தை ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளது. அதேநேரம், நித்தியா மேனன் முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *