திரைக்கு பின்னால் அல்ல, திரையிலேயே ஒட்டி உறவாட நினைத்த நடிகர் : கொந்தளிப்பில் நடிகை!
சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒன்று ஐஸ்க்கிரீம் சாப்பிடுவதுபோல் ஆகிவிடுகிறது. வாய்ப்புக்காக இயக்குனர், நடிகர், என அனைவரின் நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கி வருகிறார்கள்.
ஆனால் சில நடிகைகள் வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை இது போன்ற கேவலத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என கண்ணியத்துடன் இருக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் அந்த அமுல் பேபி நடிகை. திறமையான நடிகையாக இருக்கும் அவர் பல்வேறு மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.
சவாலான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகையை பற்றி இதுவரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்தது கிடையாது. அந்த அளவுக்கு அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அதே போன்று எந்த ஹீரோக்களும் அவரிடம் தங்கள் சேட்டையை காட்டி விட முடியாது. ஏனென்றால் அம்மணி எந்த இடம் என்றும் பாராமல் காலில் கிடப்பதை எடுத்து காட்டி விடுவார்.
அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் அவரை எந்த நடிகராலும் நெருங்க முடியவில்லை. ஆனாலும் அந்த டாப் ஹீரோவுக்கு அவர் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. அதனாலேயே தான் நடிக்கும் படத்தில் அவரை புக் பண்ண சொல்லி இருக்கிறார். ஆனால் திரைக்குப் பின்னால் தன் வேலையை காட்ட முடியாது என உணர்ந்த நடிகர் நெருக்கமான காட்சிகள் இருக்க வேண்டும் என இயக்குனருக்கு உத்தரவு போட்டிருக்கிறார்.
அதன்படி ஓவர் நெருக்கமாக காட்சிகளும் படமாக்கப்பட்டு இருக்கிறது. நடிகையும் கதைக்காக மறுப்பேச்சு பேசாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். அதை சாக்காக வைத்து நடிகர் அவரை கண்ட இடத்தில் உரசுவதும்இ தடவுவதுமாக இருந்திருக்கிறார். எப்படியோ நடிகை அந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்.
அதன் பிறகு நடிகர் அந்த காட்சிகளை எல்லாம் எடிட்டிங்கில் வெட்ட சொல்லிவிட்டு படத்தை ரிலீஸ் பண்ண சொல்லி இருக்கிறார். இதைப் பார்த்த நடிகை ரொம்பவே காண்டாகி இருக்கிறார். நடிகரின் இந்த தந்திரத்தை தெரிந்து கொண்ட அவர் இனிமேல் அவருடன் நடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாராம்.