அமிதாப் பச்சனை தொடர்ந்து சிக்கலில் சிக்கிய அனுஷ்கா ஷர்மா!!

அமிதாப் பச்சனை தொடர்ந்து சிக்கலில் சிக்கிய அனுஷ்கா ஷர்மா!!
  • PublishedMay 18, 2023

இந்திய திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் சாலையில் பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அமிதாப் பச்சன், “பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே… உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள். தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை வைரலாக்கிய நெட்டிசன்கள் வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என பதிவிட்டிருந்தனர். இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமிதாப் பச்சனைத் தொடர்ந்து நடிகை அனுஷ்கா ஷர்மா தனது பாதுகாவலருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நடிகை அனுஷ்கா ஷர்மாவின் பாதுகாவலருக்கு சாலை விதி மிறீயதாக கூறி 10,500 ரூபாய் மும்பை போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.

இது தொடர்பான ரசீது மும்பை காவல் துறையின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு, “அபராதம் செலுத்தப்பட்டுவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *