தொடர் தோல்விகளால் மலையாள படத்திற்கு பிளேன் போடும் தனுஷ்!

தொடர் தோல்விகளால் மலையாள படத்திற்கு பிளேன் போடும் தனுஷ்!
  • PublishedMay 18, 2023

நடிகர் தனுஷ் தற்போது கேப்டர் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் இந்த படம் நிச்சியமாக வெற்றிப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே  தனுஷ் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படத்தை வாங்கவுள்ளாராம். அதாவது தனுஷ் வுண்டர் பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்து உள்ளார். இப்போது அந்த நிறுவனத்தில் புதிய படம் ஒன்று தயாரிக்க இருக்கிறார்.

அதாவது சமீபத்தில் மலையாளத்தில் 2018 என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேரளா மாநிலத்தில் 2018 ஏற்பட்ட வெள்ள பெருக்கினை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனால் இதனை தமிழ்நாட்டில் திரையிட தனுஷ் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *