வடிவேலு பிறவிக்கலைஞர்; ஆனால் நல்ல மனிதர் கிடையாது

வடிவேலு பிறவிக்கலைஞர்; ஆனால் நல்ல மனிதர் கிடையாது
  • PublishedJanuary 12, 2024

காமெடியனாக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து வெற்றிக் கண்டவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக இவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

குறிப்பாக போண்டாமணி, விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலுவின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகர் பெஞ்சமின், வடிவேலு குறித்து பேசியுள்ளார்.

“நான் போண்டாமணி போன்ற பல நடிகர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்ததற்கு வடிவேலு தான் காரணம். வடிவேலு உண்மையில் பிறவிக்கலைஞர். ஆனால் அவர் நல்ல மனிதர் கிடையாது”.

“படப்பிடிப்பு தளத்தில் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினாலும் அதுகுறித்து வடிவேலு எதுவும் கேட்கமாட்டார்.

நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் இருக்கும் போது அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வடிவேலு கேரவனில் இருப்பார்”.

“கேப்டன் விஜயகாந்த் நடிகர்களின் வாழ்க்கையை புரிந்துகொண்ட அவர்களுக்கு உதவி செய்வார். யார் மனதும் நோகும்படிவிஜயகாந்த் பேசமாட்டார். அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்ப்பார்” என்று பெஞ்சமின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *