சினிமா துறையில் ஜெய்ப்பதற்கு அழகு அவசியம் இல்லை என காட்டிய நடிகர்கள்

சினிமா துறையில் ஜெய்ப்பதற்கு அழகு அவசியம் இல்லை என காட்டிய நடிகர்கள்
  • PublishedJune 21, 2025

சினிமாவில் நடிக்க அழகு இருந்தால் போதும் என்ற ஒரு சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது திறமை இருந்தால் மட்டும் போதும் சினிமா அந்த நடிகர்களை உச்சத்திற்கு கொண்டு போகிறது. நிறத்தால் புறக்கணிக்கப்பட்டு இன்று சினிமாவில் உட்சத்தில் இருக்கும் 4 நடிகர்களை பற்றி பார்ப்போம்.

தன் ஆரம்ப காலத்தில் சினிமா பயணத்தில் வெற்றிபெற தளபதி விஜய் கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் சின்சியர் நடிப்பின் மூலம் முன்னணி ஹீரோவாக மாறினார். ஆரம்பத்தில் அவருடைய தோற்றம் மற்றும் தோல் நிறம் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், தனது திறமை மற்றும் மாஸ் ஸ்கிரீன் அப்பீலால் இன்று தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

சிலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம் – ஆனாலும் ஆர்யாவுக்கு அழகு குறித்து dark skin tone குறித்த விமர்சனங்கள் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால், தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் ஃபிட்னஸ் மூலம் முன்னணி ஹீரோவாக மாறினார்.

வாழ்க்கையில் அடிபட்ட அடிபட்ட சினிமாவுக்கு வந்தவர் தான் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமானார். பிறகு பீசா, சூது கவ்வும், 96, விக்ரம் படங்கள் மூலம் தனது திறமையான நடிப்பால் ” மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி என்ற பட்டத்தை பெற்றார்.

விஜய் சேதுபதி நிறத் தோற்றத்தில் சாதாரணமானவர் தான், ஆனால் அவருடைய நடிப்பு திறமை தான் அவரை சினிமாவில் உச்ச நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

முதலில் காமெடி சைடு ரோலில் அறிமுகமானவர்தான் யோகி பாபு. சினிமாவில் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ஒரு காலகட்டத்தில் எதிர்பார்த்த யோகிபாபுவிற்கு மண்டேலா படத்தின் ஹீரோ கதாபாத்திரம் தான் முதல் வெற்றியாக இருந்தது.

நிறத்தில் குறைந்தவராக இருந்தாலும் இன்று வரை ரசிகர்களை தன் காமெடி திறமையால் கட்டிப்போட்டு வைத்த ஒரே நடிகர் யோகிபாபு.

சினிமாவில் தன் கடின முயற்சியால் ஹீரோவாக வலம் வருபவர் கதிர். மதயானை கூட்டம் படத்தில் தன் தோரணையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கூட்டத்தை சேர்த்தவர். இதைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் ஹிட் கொடுத்து மேலும் பிரபலமானார்.

சினிமா துறையில் ஜெய்ப்பதற்கு நிறம் தடை இல்லை என்று சாதித்து காட்டிய நடிகர்களில் கதிரும் ஒருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *