கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை சம்பவ இடத்திலேயே பலி

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை சம்பவ இடத்திலேயே பலி
  • PublishedMay 12, 2024

பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 35.

ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர், ஷெரிப்பள்ளி கிராம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதியது. அப்போது,​​ஹைதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்த பேருந்து, காரின் வலது பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது.

இதில் பவித்ரா ஜெயராமின் உறவினர் அபேக்ஷா, டிரைவர் ஸ்ரீகாந்த், சக நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *