ட்ரோல்ஸிற்கு பதிலடி கொடுத்த ஜான்வி…அதிரடி தகவல்

ட்ரோல்ஸிற்கு பதிலடி கொடுத்த ஜான்வி…அதிரடி தகவல்
  • PublishedAugust 20, 2025

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நாம் அறிவோம்.

சமீபத்தில், ஜான்வி மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த தஹி ஹண்டி விழாவில் பங்கேற்றார். அப்போது, ஜான்வி பாரத் மாதா கி ஜெய்” என்று கோஷமிட்டார்.

இது தெடர்பான வீடியோ வெளியாகி பலர் ஜான்வியை, இது சுதந்திர தினம் இல்லை என்று ட்ரோல் செய்ய தொடங்கினர். தற்போது, இதற்கு தனது இன்ஸ்டா தளத்தில் ஜான்வி விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ” அங்குள்ள அனைவரும் எனக்கு முன் பாரத் மாதா கி ஜெய் என்று கூறினர். அதன் பின் தான் அதை நான் சொன்னேன்.

வேண்டுமென்றே வீடியோவை கட் செய்து வைரலாகி வருகின்றனர். மேலும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டுமல்ல, தினமும் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *