பெத்தி படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட…நடிகை காஜல்

பெத்தி படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட…நடிகை காஜல்
  • PublishedApril 18, 2025

உப்பேனா’ பட இயக்குனர் புஞ்சிபாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம்சரண், அவரது 16வது படமாக ‘பெத்தி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார்.

சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதன் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட நடிகை காஜல் அகர்வாலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே காஜல் அகர்வால், ராம் சரணுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *