‘மாரீசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…நடிகை கோவை சரளா

நடிகை கோவை சரளா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர நடிகை, நகைச்சுவை நடிகையாக கலக்கியவர். சமீபகாலமாக படங்களில் நடிப்பதை கொஞ்சம் குறைத்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு உடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளார் கோவை சரளா.
மாமன்னன் படத்திற்கு பிறகு வடிவேலு, பஹத் பாசில் ஆகியோர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மாரீசன்’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் கோவை சரளா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, கோவை சரளா பல படங்களில் ஜோடியாக நடித்து காமெடியில் கலக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஒரு நடுத்தர வயதை சார்ந்தவரும், ஒரு இளைஞரும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவத்தை மையமாக கொண்டதாக காமெடி கலந்த கதையில் உருவாகி வருகிறது.