இரவோடு இரவாக பொலஸ் நிலையத்திற்கு ஓடிய ரக்ஷிதா! அட இதுதான் மேட்டரா??

இரவோடு இரவாக பொலஸ் நிலையத்திற்கு ஓடிய ரக்ஷிதா! அட இதுதான் மேட்டரா??
  • PublishedJune 21, 2023

பிரபல சின்னத்திரை நடிகையாக ரக்ஷிதா தனது கணவர் தினேஷ் மீது பொலிசில் முறைப்படளித்துள்ளார்.

பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட தினேஷ்- ரக்ஷிதா மகாலட்சுமி காதலன் தினேஷை இரு வீட்டார் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

திருமணம் முடிந்தாலும் சின்னத்திரையில் பிஸியான நடிகையாகவே வலம் வந்தார் ரக்ஷிதா, தினேசும் சீரியல்களில் நடித்து வந்தார்.

இருவரும் இணைந்து நடித்த நாச்சியார்புரம் தொடரில் நடித்தனர், இதற்கிடையே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகின.

இருவரும் தற்காலிகமாகவே பிரிந்து இருப்பதாகவும் விரைவில் இணைந்துவிடுவோம் என நம்பிக்கையுடன் பேட்டியளித்தார் தினேஷ்.

இதற்கிடையே பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார் ரக்ஷிதா மகாலட்சுமி, அப்போது கூட அவருக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்தார் தினேஷ்.

இந்நிலையில் இரவோடு இரவாக தன்னுடைய கணவர் தினேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுப்பதாக சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் தொடர்பில் தினேஷ் தரப்பில் இருந்து, விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடுவதாக முடிவெடுத்திருந்தால் செய்து கொள்ளட்டும் என கூறியதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *