நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் விஜய் போஸ்டர்… தெறிக்கவிடும் தளபதி பேன்ஸ்…
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு ஊர்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகளின் பசியாற்றும் விதமாக இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இரத்த தான முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் தளபதி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி ஆரவாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக வருங்கால முதல்வரே என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்திலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு ரசிகர்களை மிஞ்சும் வகையில் வெளிநாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் அமெரிக்காவில் ஒரு மாஸ் சம்பவத்தை செய்து அசத்தி உள்ளனர்.
அதன்படி, நடிகை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கனடாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள், புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பில்போர்டில் நடிகர் விஜய்யின் போஸ்டர்கள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளதால், தளபதிக்கு இது மறக்கமுடியாத பிறந்தநாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.