நாடாளுமன்ற தேர்தல் 2024.. திருவனந்தபுரத்தில் நடிகை ஷோபனா என்ன செயறாங்க?

நாடாளுமன்ற தேர்தல் 2024.. திருவனந்தபுரத்தில் நடிகை ஷோபனா என்ன செயறாங்க?
  • PublishedApril 14, 2024

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பாஜகவிற்கு ஆதரவாக நடிகை சோபனா பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும், நடனக் கலைஞருமான ஷோபனா, இன்று (ஏப்ரல் 14) பாஜக-என்.டி.ஏ வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய திருவனந்தபுரம் வந்தார்.

இதற்காக கேரள மாநிலத்தின் தலைநகருக்கு வந்த ஷோபனா, நெய்யாற்றின்கராவில் அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகருடன் இணைந்து ரோட் ஷோவில் பங்கேற்றார்.

இதில், அரசியலில் நுழைவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை ஷோபனா.

“நான் எனது சொந்த நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் கொண்ட ஒரு நடிகை. அவ்வளவுதான். பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் நானும் ஒரு அழைப்பாளர் என்பதால் கலந்துகொள்வேன்” என்றார் அவர்.

முன்னதாக திருச்சூரில் நடந்த பாஜகவின் ஸ்த்ரீ சக்தி நிகழ்ச்சியில் ஷோபனா கலந்து கொண்டார், இது அவர் பாஜகவில் சேரப் போவதாக பலத்த வதந்திகளை கிளப்பியது. இதற்கிடையில், பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜீவ் சந்திரசேகருக்கு ஷோபனா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *