ஆண்டவரோடு மோதப்போகும் சன்னி லியோன்? சம்பவம் கன்ஃபோம்

ஆண்டவரோடு மோதப்போகும் சன்னி லியோன்? சம்பவம் கன்ஃபோம்
  • PublishedJune 3, 2024

பிரபல நடிகை சன்னி லியோன் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான “வடகறி” என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் “ஓ மை கோஸ்ட்” என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த சன்னி லியோனே.

அவர் நடிப்பில் ஏற்கனவே இந்த ஆண்டு ஒரு மலையாள திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக இந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டில் எட்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கன்னடம், ஹிந்தி மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள “Quotation Gang” என்கின்ற திரைப்படம் விரைவில் உலக அளவில் வெளியாக உள்ளது.

இதேவேளை, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளிவரும் நிலையில், சன்னி லியோனேவின் “Quotation Gang” திரைப்படமும் அதே ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

எனவே இந்தியன் 2 திரைப்படத்தோடு போட்டியாக தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் அந்த திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியாமணி, மூத்த நடிகர் ஜாக்கி சரஃப் மற்றும் இளம் நடிகை சாரா அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *