நடிகை தமன்னா நண்பர்களுடன் நைட் பார்ட்டிட்யில்…இதோ

நடிகை தமன்னா நண்பர்களுடன் நைட் பார்ட்டிட்யில்…இதோ
  • PublishedJuly 4, 2025

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Odela 2 சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. அடுத்ததாக Ranger, ரோஹித் ஷெட்டியுடன் ஒரு திரைப்படம், Vvan: Force of the Forrest ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிப்பை விட இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை பெறுகிறது. ஜெயிலர், Stree 2 போன்ற படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த Raid 2 திரைப்படத்திலும் தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இருவரும் இணைந்து வெப் தொடரில் நெருக்கமாக நடித்திருந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

காதல் முறிவுக்கு பின் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தமன்னா, அண்மையில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார். அந்த வீடியோ கூட வெளிவந்து இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த நிலையில், உடல் எடை குறைத்து ஆளே மாறியுள்ள தமன்னா, லேட்டஸ்ட்டாக கிளாமர் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். சமீபத்தில் நடிகைகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *