அன்று கேரவனில் நடிகை தமன்னாவுக்கு நடந்த அதிர்ச்சி!!
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் ஜொலித்து கொண்டு இருக்கிறார். படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், தமன்னா அவரது கேரவனில் நடந்த துயரம் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” நான் எனது கேரவானில் இருக்கும்போது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்தது. அதனால் மிகவும் மனம் உடைந்த என் கண்கள் குளமாகின. அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்தது அதனால் என்னால் அந்த இடத்தில் அழ முடியாது.
அப்போது நான் என்னிடம் இது ஒரு உணர்ச்சி மட்டும் தான். அதை நான் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். இது எனக்கு மிகவும் உதவியது ” என்று கூறியுள்ளார்.