நடிகர் திலகம் சிவாஜியையே மிரளவிட்ட நடிகை : யார் என்று தெரியுமா?
கலைஞர்களை பொறுத்தவரை தன்னுள் இருக்கும் திறமைகளை வெளிக்காட்டியே வாய்ப்புகளை பெறுகின்றனர். அவ்வாறு தன்னிடம் இருக்கும் பன்முக திறமைகளை கொண்டு புகழின் உச்சியில் இருந்தவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இத்தகைய ஜாம்பவானையே மிரள வைத்த நடிகையை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர் வேறு யாரும் அல்ல. ஆச்சி என்று செல்லப்பெயர்க் கொண்டு அழைக்கப்பட்ட நடிகை மனோரம்மா தான். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு கிடைத்த வாய்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்று நடிக்கும் வல்லமை கொண்டவர் நடிகை மனோரமா.
தன்னை ஒரு குணச்சித்திர நடிகை ஆக அடையாளப்படுத்திக் கொண்டவர். சக கலைஞர்களே பொறாமை படக்கூடிய பெருமையை கொண்டவர். நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவரின் உச்சரிப்பு நான் பெரிதும் பேசப்பட்டது.
இத்தகைய பெருமை வாய்ந்த இவர் எந்த ஒரு கர்வமும் காட்டாமல் தன் எளிமையான நடிப்பை வெளிக்காட்டுவாராம். மேலும் எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் அதை சிங்கிள் டேக்கில் முடித்து கொடுத்து விடுவாராம்.
மேலும் இவரின் சிங்கிள் டேக் வசனத்தை கண்டு சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்கள் மிரண்டே போவார்களாம். இவரின் வசனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறும் சக நடிகர்களுக்காக திரும்பவும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பாராம்.