கேப்டன் மில்லர் படத்தில் சீக்ரெட் கேரக்டர் பற்றிய செய்தி வெளியானது…

கேப்டன் மில்லர் படத்தில் சீக்ரெட் கேரக்டர் பற்றிய செய்தி வெளியானது…
  • PublishedOctober 14, 2023

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் வரும் டிசம்பரில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்னும் ஒரே வாரத்தில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள், பீரியட் படத்திற்கான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் முடுக்கி விட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் இதுவரை வெளியாகாத சீக்ரெட் கேரக்டர் ஒன்று அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருவி படத்தில் லீட் கேரக்டரில் நடித்திருந்த அதிதி பாலன், கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கதைக்களத்தில் இவரது போர்ஷன்கள் மிகவும் முக்கியமாக அமைந்துள்ளதாகவும் தகவ்லகள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் அடுத்தடுத்த பாகங்களாக உருவாகவுள்ள நிலையில், அடுத்த பாகத்தை கருத்தில் கொண்டு அதிதி பாலனின் போர்ஷன்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *