அஜித்துக்காக பயங்கரமான ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வச்ச விஜயின் அன்புத் தம்பி

அஜித்துக்காக பயங்கரமான ஸ்க்ரிப்ட் ரெடி செய்து வச்ச விஜயின் அன்புத் தம்பி
  • PublishedNovember 16, 2023

அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் இருப்பதாக அட்லீ கூறியுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அட்லீ, அதன்பின்னர் தளபதி விஜய்யுடன் அடுத்தடுத்து 3 படங்களில் இணைந்தார். தெறி, மெர்சல், பிகில் என விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன.

இதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் இருந்து அட்லீக்கு வாய்ப்புத் தேடி வந்தது.

அதன்படி, முதன்முறையாக பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். இந்தியில் அறிமுகமான முதல் படத்திலேயே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து காட்டியுள்ளார் அட்லீ.

இதனால், அட்லீயின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. விஜய்யின் அன்புத் தம்பியான அட்லீ, மீண்டும் தளபதியுடனே இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணையலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய் – ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க கதை ரெடி செய்து வருவதாக அட்லீ கூறியுள்ளார். அதேபோல், ஹாலிவுட்டில் இருந்தும் அவருக்கு அழைப்பு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்காக ஒரு பயங்கரமான கதை ரெடி செய்து வைத்திருப்பதாக அட்லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி தனது சமீபத்திய பேட்டியில் பேசியிருந்த அட்லீ,

அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் எழுதி வைத்துள்ளேன். அவர் ஓக்கே சொல்லிவிட்டால் அந்த கதையை படமாக இயக்குவேன் எனக் கூறியுள்ளார். முன்னதாக ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் சாரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னுடன் ஜாலியாக பேசியதையும் அட்லீ ஷேர் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *