“எது வேணும்னாலும் நடக்கலாம்” குலை நடுங்க வைக்கும் அஜித்தின் வீடியோ
“நான் இந்த ரேஸில் பங்கேற்கும்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் தான் நான் என்னுடைய கமிட்மென்டுகளை முடித்துவிட்டு செல்ல வேண்டும்” என அஜித் சொன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் விளம்பர பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் மகிழ்திருமேனி அண்மையில் அளித்த பேட்டியில், “அஜித்குமார் ரேஸுக்கு புறப்படும் 2 வாரங்களுக்கு முன்பு, அவர் கார் ரேஸ் பயிற்சிக்கு சென்று வந்தார்.
அந்த வீடியோக்களை காட்டினார். அதில் 2 விபத்துகள் அவருக்கு ஏற்பட்டுள்ளன. அந்த வீடியோவை பார்க்கும்போது எங்களுக்கு குலை நடுங்கிவிட்டது.
அந்த சமயத்தில் அஜித் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. ‘நான் இந்த ரேஸில் பங்கேற்கும்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
அதனால் தான் நான் என்னுடைய கமிட்மென்டுகளை முடித்துவிட்டு செல்ல வேண்டும். ஏனென்றால் என்னை நம்பி 2 தயாரிப்பாளர்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது.
அதனால் நான் ரேஸிங்குக்கு செல்லும்போது 100% ஆக்சிலேட்டரை மிதிக்க வேண்டும். நமக்கு 2 படங்கள் உண்டு என நினைத்துவிட்டு பாதுகாப்பாக ரேஸ் செய்வதாக நினைத்து வெறும் 90% மட்டும் ஆக்சிலேட்டரை மிதித்தால் கார் ரேஸுக்கு நான் நியாயம் சேர்க்கவில்லை என அர்த்தம்'” என தெரிவித்தார்.