கோர விபத்தில் சிக்கினார் அஜித்!! தூள் தூளாக நொறுக்கிய ரேஸ் கார்! கதறும் ரசிகர்கள்!

கோர விபத்தில் சிக்கினார் அஜித்!! தூள் தூளாக நொறுக்கிய ரேஸ் கார்! கதறும் ரசிகர்கள்!
  • PublishedJanuary 7, 2025

அஜித் குமார் கார் ரேஸூக்காக பயிற்சி மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளது. எனினும் அஜித் எந்த காயமும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

துபாயில் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கார் ரேஸ் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸில் அஜித் குமாரும் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக அவர் தனது காரை பார்த்து பார்த்து உருவாக்கியிருந்தார். இதற்காக கடந்த சில மாதங்களாக அஜித் குமார் துபாயில் இருந்தார்.

மேலும், கார் ரேஸ் பயிற்சியும் மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் தனது விடாமுயற்சி படத்தின் சில காட்சிகளையும், டப்பிங் பணிகளையும் முடிப்பதற்கு சென்னை வந்த அவர் விடாமுயற்சி பட காட்சிகளையும், டப்பிங் பணிகளையும் முடித்த கையோடு சில தினங்களுக்கு முன்பு துபாய் புறப்பட்டு சென்றார்.

அவரை வழியனுப்பி வைக்க அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. இந்த நிலையில் தான் இன்று அஜித் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இதில் எதிர்பாராத விதமாக அவரது காரானது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பக்கம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த மருத்துவ குழு அவரை பத்திரமாக மீட்டுள்ளது. எனினும், இந்த கார் விபத்தில் அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *