15 கிலோ வரை உடல் எடை குறைத்த அஜித் குமார்

15 கிலோ வரை உடல் எடை குறைத்த அஜித் குமார்
  • PublishedDecember 13, 2023

விடாமுயற்சி படத்திற்காக 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவில் அறிமுகமாகி சொந்த முயற்சியால் முன்னேறி இன்று தனக்கென ஒரு தனி இடத்தையே பிடித்திருப்பவர் தான் அஜித்குமார்.

இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62-வது படமான இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். அதேபோல் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை முதலில் நீரவ் ஷா கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் விலகியதால் அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் அவர் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம். சமீபத்தில் அஜர்பைஜான் சென்ற அஜித்துடன் அப்படத்தின் வில்லன் நடிகரான ஆரவ் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

அந்த புகைப்படத்தில் உடல் மெலிந்த தோற்றத்தில் மிகவும் ஸ்லிம்மாக அஜித் இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *