‘நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை’ நடிகர் அஜித் உருக்கமாக வெளியிட்ட அறிக்கை

‘நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை’ நடிகர் அஜித் உருக்கமாக வெளியிட்ட அறிக்கை
  • PublishedJanuary 14, 2025

“எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது” என நடிகர் அஜித்குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று முடிந்த துபாய் 24H கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி 3வது இடத்தை பிடித்தது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “அன்பான அனைவருக்கும் வணக்கம்! துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள். நன்றி!” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *