ஒருவழியாக சிக்கல்களை தீர்த்த அஜித் : வெளியாகிய சூப்பர் அப்டேட்!
அஜித்தின் துணிவு படத்திற்குப் பிறகு அவருடைய அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், அவர் லைக்காவுடன் இணைந்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட சில சிக்கல்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதேநேரம் படத்தின் ஹீரோயினுக்கான அட்வான்ஸ் பணத்தைக் கூட கொடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.
இவ்வாறாக இழுப்பறியில் இருந்த படத்திற்கு தற்போது விடிவுகாலம் வந்தாச்சி என்றே சொல்லவேண்டும். அதுவும் அஜித் மனசு வைத்ததால் மட்டுமே. அது என்னவென்றால் தயாரிப்பாளர் இடம் ஹீரோயின் வரும்போது வரட்டும் அதற்கு முன்னதாக நான் நடிக்க வேண்டிய காட்சிகளை வைத்து படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று கூறுகிறார்.
ஏற்கனவே தயாரிப்பாளர் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதால் இந்த விஷயம் செய்தால் கொஞ்சம் அவருக்கு தீர்வு கிடைத்தது மாதிரி இருக்கும்.
அத்துடன் தயாரிப்பாளரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி வளைந்து கொடுத்து எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பித்து விட்டார். இதனால் ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.