இன்று விஜயகாந்த் நினைவிடம் செல்வாரா அஜித்? உற்று நோக்கும் நெட்டிசன்கள்…

இன்று விஜயகாந்த் நினைவிடம் செல்வாரா அஜித்? உற்று நோக்கும் நெட்டிசன்கள்…
  • PublishedJanuary 6, 2024

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அஜித் சென்னை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஜித் இறுதி அஞ்சலி செலுத்த இன்று செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி, பிரபு உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அப்போது அஜித் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அவர், அதன் பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாயில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

இன்று சென்னையில் நடக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அஜித் துபாயில் இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கலைஞர் நூற்றாண்டு விழா செல்லும் முன்பு, விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்த வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாத கார்த்தி, சூர்யா, சிவகுமார், சசிகுமார், ஜெயம் ரவி ஆகியோர் கேப்டனின் நினைவிடம் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இவர்களது வரிசையில் இன்று அஜித்தும் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *