அல்லு அர்ஜுனுக்கு வில்லனான பவன் கல்யாண்? நடந்தது என்ன?
புஷ்பா – 2 திரைப்படம் வெளியான போது திரையரங்கில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலால் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து குறித்த திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன் அறிவிக்காமல் வந்ததே காரணம் என குறிப்பிட்டு, அவர் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
திரையுலகில் பல அசம்பாவிதங்கள் நடந்த போதும், நடிகர்கள் மீது இவ்வளவு கோபங்கள், வழக்குகள் பாய்ந்ததில்லை. ஆனால் அல்லு அர்ஜூனுக்கு மட்டும் ஏன் இப்படி என கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது இப்படி இருக்க இந்த சம்பவத்தில் பவன் கல்யாண் அமைதியாக இருப்பது குறித்து பல சர்ச்சைகள் வெடித்துள்ளன.
இது தொடர்பில் பிரபல திரை விமர்சகர் சரவனன் சினிமெஸ்டாவுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் பல தகவல்களை வழங்கியுள்ளார்.