ஆல்யா மானசா, சஞ்சீவ் விவாகரத்தா? என்ன நடந்தது?

ஆல்யா மானசா, சஞ்சீவ் விவாகரத்தா? என்ன நடந்தது?
  • PublishedFebruary 16, 2024

வெள்ளத்திரை போல சின்னத்திரையிலும் ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் ஆல்யா மானசா-சஞ்சீவ்.

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் மூலம் ஒன்றாக நடிக்க தொடங்கியவர்களுக்கு முதல் சீரியலே பெரிய ஹிட்.

அதன்பிறகு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இதையடுத்து, ஆல்யா மானசா விஜய் டிவியில் ராஜா – ராணி 2 இல் நடித்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் அந்த தொடரிலிருந்து விலகிவிட்டார்.

அதேபோல் சஞ்சீவும் விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இருவரும் சன்டிவி பக்கம் சென்றுள்ளனர்.

ஆல்யா மானசா இனியா என்ற தொடர் நடிக்க சஞ்சீவ் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார், இரண்டு தொடர்களுமே சன் டிவியில் தான் ஒளிபரப்பாகிறது.

சீரியலில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட், தனியார் நிகழ்ச்சிகள் என இவர்கள் பிஸியாக இருக்கிறார்கள்.

ஹரிகரன் நிகழ்ச்சிக்காக இவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்ததையும் குறிப்பிடவேண்டும்.

அண்மையில் ஒரு பேட்டியில் சீரியல் நடிகை ஆல்யா மானசா பேசும்போது, நாங்கள் விவாகரத்து செய்யப் போகிறோம் என்ற செய்திவரும் போதெல்லாம் நாங்கள் சிரித்துக்கொண்டு தான் இருப்போம். ‘ஏன் எதுக்கு. நாங்க நல்லா இருக்கது உங்களுக்கு பிடிக்கலையாபா?” என்று கூறியுள்ளனர்.

பெரியதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கப் போவது கிடையாது.

அதேபோல் கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து ஆரம்பத்தில் கோபப்பட்டு இருந்தேன், பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைப்பேன், இப்போது அந்த சிந்தனையே இல்லை என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *