வயிற்றில் குழந்தையுடன் அமலாபால் செய்யும் வேலையை பாருங்க…

வயிற்றில் குழந்தையுடன் அமலாபால் செய்யும் வேலையை பாருங்க…
  • PublishedJanuary 29, 2024

தமிழ், தெலுங்கு, மலையாளம் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸியான நடிகையாக வலம் வந்தவர் அமலாபால்.

இயக்குனர் விஜய் உடனான திருமணம், அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் முறிவு என பரபரப்பான நிகழ்வுகளுக்கு பிறகு சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கி இருந்தார் அமலாபால். தனது காதலராக ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த அமலாபால் தொடர்ச்சியாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

தற்போது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியமான, யோகாசனத்தில் ஒரு பிரிவான மலாசனா என்கிற யோகாசனத்தை தொடர்ந்து செய்து வருகிறார் அமலாபால்.

இதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமலாபால், ‛‛இந்த ஆசனம் இடுப்பு பகுதியை பலமாக வைத்திருக்க உதவுகிறது என்றும், அதே சமயம் இந்த ஆசனத்தை செய்ய விரும்புபவர்கள் தங்களது மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு செய்வது நல்லது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *