‘அமரன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு

‘அமரன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு
  • PublishedMay 24, 2024

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அமரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த திரைப்படத்தில் “முகுந்தன்” என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *