சிவகார்த்திகேயனின் வாய்ப்பை தட்டிப்பறித்த அமீர் கான்… அப்படி என்னவா இருக்கும்?

சிவகார்த்திகேயனின் வாய்ப்பை தட்டிப்பறித்த அமீர் கான்… அப்படி என்னவா இருக்கும்?
  • PublishedJune 30, 2025

அமீர் கான் நடிப்பில் கடந்த ஜூன் 20ம் தேதி பாலிவுட் சினிமாவில் வெளிவந்த திரைப்படம் சித்தாரே ஜமீன் பர்.

இப்படத்தில்அமீர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார்.

தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.எஸ். பிரசன்னா இப்படத்தை இயக்கியிருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் நடிக்கவிருந்துள்ளனர்.

ஆனால், அமீர் கான் எடுத்து ஒரு முடிவால் அனைத்தும் மாறியுள்ளது. அதை பற்றி அமீர் கான் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

“லால் சிங் சத்தா படத்திற்கு பின் சினிமாவிலிருந்து பிரேக் எடுக்க முடிவு செய்தேன். இதை இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னாவிடமும் தெரிவித்தேன். நடிகராக அல்லாமல் தயாரிப்பாளராக தொடருங்கள் என அவர் கூறினார்.

அதற்கு ஒப்புக்கொண்டேன். சித்தாரே ஜமீன் பர் படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கலாம் என முடிவு செய்து, சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோரிடம் கதை சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் இப்படத்தின் கதை பிடித்துப்போக, அவர்களின் கால்சீட் வாங்கினோம்.

ஆனால், ஒரு கட்டத்தில் இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போக, இதில் ஏன் நாமே நடிக்கக்கூடாது என தோன்றியது. அந்த அளவிற்கு எனக்கு கதை பிடித்திருந்தது. இதை இயக்குநர் பிரசன்னாவிடம் கூறினேன்.

அவரும் சரி என்றார். இதன்பின் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் இருவரிடமும் இதை பற்றி கூறி மன்னிப்பேன் கேட்டேன். முதலில் அவர்களுக்கு இது ஏமாற்றத்தை தந்தாலும், பின் எனது சூழ்நிலையை புரிந்துகொண்டனர்”. என அமீர் கான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *