அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த “அமேசான் ப்ரைம் வீடியோ”

அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த “அமேசான் ப்ரைம் வீடியோ”
  • PublishedMarch 23, 2024

ஓடிடி தளத்தில் முதன்மை தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் “ப்ரைம் வீடியோ பிரசண்ட்ஸ்” என்ற விழாவை நடித்தினர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.

2024 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் என்னனென்ன படங்கள் இடம்பெற போகிறது என்பதை அறிவிப்பதற்காகவே இந்த விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் 69 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர் பார்க்கப்படும் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தை 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “கேங்க்ஸ் குருதி புனல்” என்ற வெப் சீரிஸின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளது.

நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இக்கதை 70 காலக்கட்டத்தில் நடக்கும் நாடகமாகும், ஒரு துறைமுக நகரத்தின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்குள் பழிவாங்கும் மற்றும் அதிகாரத்தை மீட்டெடுக்கும் ரத்தப் போராட்டமாக இக்கதைக்களம் அமைந்துள்ளது.

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இந்த வெப் சீரிஸ்சில் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராக பணியாற்றி இருக்கிறார். நோவா இக்கதையை இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *