BIG UPDATE: தலைவர் 170 இல் அமிதாப் பச்சன்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது…

BIG UPDATE: தலைவர் 170 இல் அமிதாப் பச்சன்… உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது…
  • PublishedOctober 3, 2023

ரஜினிகாந்தின் தலைவர் 170 இல் அமிதாப் பச்சன் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இந்த அறிவிப்பால் கோலிவுட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெயிலருக்குப் பிறகு ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ஜெய் பீம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 170வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,

“ஜெயிலர் படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை பெற்றுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் எனது 170வது படம் நல்ல கருத்துடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு விரைவில் வரும். படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *