அம்மன் படத்தில் நடித்த சிறுமி யார் தெரியுமா? இப்போ எப்படி இருக்காங்க? லேட்டஸ்ட் போட்டோ

அம்மன் படத்தில் நடித்த சிறுமி யார் தெரியுமா? இப்போ எப்படி இருக்காங்க? லேட்டஸ்ட் போட்டோ
  • PublishedNovember 29, 2023

90ஸ் கிட்ஸிடம் சாமி படம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது பெரும்பாலும் ‘அம்மன்’ படமாகத்தான் இருக்கும். அம்மன் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான் என்று நம்பி கொண்டிருந்த 90’ஸ் சிறுவண்டுகளும் உண்டு.

பேய் படங்களை கூட அசால்டாக பார்த்த 90’ஸ் கிட்ஸ், அம்மன் படத்தில் வரும் மொட்டை மந்திரவாதி வில்லன் சொல்லும் “சண்டா..” சத்தத்தை கேட்டு அலறியுள்ளனர் என்றால் மறுக்கமுடியாது.

கோடி ரம்யா கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, ராமயா கிருஷ்ணன், சுந்தர் என பலர் நடித்துள்ளனர். திகில், அமானுஷ்யம் , சூனியம், அம்மன் சக்தி என்று மிரட்டியிருக்கும் இந்த படம்

ரம்யா கிருஷணனின் அம்மன் கதாபாத்திரமும் , குழந்தை அம்மன் கதாபாத்திரமும் இன்றும் கண்முன் வந்து செல்லும் .

‘பவானி..’ என்று கொஞ்சும் குழந்தை குரலில் பேசும் அந்த அழகிய குழந்தை யாராக இருக்கும்? இப்போ என்ன பண்றாங்க.. சினிமால இருக்காங்களா இல்லையா என்று பல கேள்விகள் நம்மில் பலருக்கு இருக்கும்

அந்த குழந்தையின் பெயர் சுனைனா பாதம், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் அம்மன் படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்துவிட்டார்.

அதன் பின், 1996 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்துள்ளார் அதன் பிறகு சினிமா பக்கம் அவரை காணவில்லை.

திருமணமாகி கணவருடன் வசித்து வரும் அவர், ‘என்ஆர்ஐ ப்ரெக்னென்ட் வுமன்’ என்று அவர் வெளியிட்ட வீடியோக்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது.

அம்மன் படத்தில் நடித்த சிறுமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோ இதோ!

அதை தொடர்ந்து அவர் ப்ராஸ்டேட்ட வுமன் என்ற வெப் சீரீஸில் நடித்தார். அதை தொடர்ந்து கிடைக்கும் படங்கள் மற்றும் வெப் சீரீஸில் நடித்து வருகிறார்.

சமந்தாவின் ‘ஓ பேபி’, அஜித் நடித்த ‘வலிமை’ போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *