எமிஜாக்சனுக்கு மீண்டும் திருமணம்? வைரலாகும் புகைப்படம்

எமிஜாக்சனுக்கு மீண்டும் திருமணம்? வைரலாகும் புகைப்படம்
  • PublishedJanuary 30, 2024

மதராசபட்டனம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமிஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அருண் விஜய்யுடன் மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருந்தார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த எமிஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து வந்தார். திருமணம் ஆகாமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாட்டால் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.

இதையடுத்து தனது மகன் ஆண்ட்ரியாசுடன் தனியாக வாழ்ந்து வந்த எமிஜாக்சன், நடிகர் எட்வெஸ்ட் விக்கை காதலித்து வந்தார்.

இருவரும் ஜாலியாக ஆங்காங்கே சுற்றி திரியும் படங்களை அவ்வப்போது எமிஜாக்சன் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், நடிகர் எட்வெஸ்ட் விக் நடிகை எமிஜாக்சனிடம் மோதிரம் நீட்டி புரொபோஸ் செய்துள்ளார். அவரது புரொபோஸை ஏற்றுக்கொண்ட எமிஜாக்சன் அந்த மோதிரத்தை கையில் அணிந்து கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்களை எமி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா உலகில் திருமணம், காதல், விவாகரத்து, இரண்டாம் திருமணம் எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. அண்மையில் அமலாபாலும் முதல் திருமணம் தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் திருமணம் செய்து தற்போது கர்ப்பமாக உள்ளார்.

அந்த வகையில் தற்போது எமிஜாக்சனும் அந்த லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *