அதீத கவர்ச்சியில் இணையத்தை தெறிக்கவிடும் ஆன்ட்ரியா.. கதவைத்தட்டும் பட வாய்ப்புக்கள்

அதீத கவர்ச்சியில் இணையத்தை தெறிக்கவிடும் ஆன்ட்ரியா.. கதவைத்தட்டும் பட வாய்ப்புக்கள்
  • PublishedMarch 16, 2023

நடிகை ஆன்ட்ரியா பாடகியாக அறிமுகமாகி நடிகையாகவும் பாடகியாகவும் அதிரடி கிளப்பி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ஆன்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிரட்டியுள்ளன.

சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படும் ஆன்ட்ரியா, தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தன்னுடைய இசைக் கச்சேரிகள் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு வருகிறார்.

ஆன்ட்ரியா பாடகியாக தன்னுடைய திரையுலகப் பயணத்தை துவக்கினார் ஆன்ட்ரியா. இவரது ஸ்டைலிஷ்ஷான பல பாடல்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன. சர்வதேச அளவில் ரசிகர்களையும் பெற்றுத் தந்தன. இந்நிலையில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக ஒரு குழந்தையின் தாயாக படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் ஆன்ட்ரியாவிற்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத்தந்தது. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றத்தந்தது.

தொடர்ந்து வடசென்னை படத்தில் ஆன்ட்ரியாவின் கேரக்டர் மிரட்டியது. தன்னுடைய ஸ்டைல் மற்றும் அழகால்தான் ஆன்ட்ரியாவிற்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அதை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து தன்னுடைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

தன்னுடைய கவர்ச்சி தூக்கலான நடிப்பு மற்றும் வசீகரமான குரலால் ரசிகர்களை தொடர்ந்து வதை செய்துவரும் ஆன்ட்ரியா, இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல இசைக் கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். அடுத்தடுத்த கச்சேரிகளில் அம்மணி ரொம்பவே பிசி. சமீபத்தில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. இதையடுத்து ஆன்ட்ரியாவின் ஃபேன் பேஸ் மேலும் அதிகரித்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆன்ட்ரியா அடுத்தடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். குட்டி ஷார்ட்ஸ் உள்ளிட்ட பல உடைகளில் இவர் போடும் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கிறங்கித்தான் போகிறார்கள். தொடர்ந்து லைக்ஸ்களும் அள்ளி வருகிறது. இந்நிலையில் உள்ளாடையை போன்ற வெள்ளைநிற உடையில் ஆன்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

தொடர்ந்து இதேபோன்ற புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆன்ட்ரியா. இதுபோன்ற புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதுடன் அவருடைய பாலோவர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது. தற்போது ஆன்ட்ரியாவை 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புகளும் அவரது கதவைத் தட்டி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *