காதலில் விழுந்த அனிகா? அட இந்த ஹீரோவா?

காதலில் விழுந்த அனிகா? அட இந்த ஹீரோவா?
  • PublishedSeptember 17, 2025

ரசிகர்களால் குட்டி நயன் என செல்லமாக அழைக்கப்படுபவர் அனிகா சுரேந்திரன். தற்போது 20 வயதாகும் அவர், தன்னைவிட 36 வயது மூத்த நடிகர் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக கூறி இருக்கிறார்.

பான்-இந்தியா நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இடையேயான காதல் விவகாரம் ஒட்டுமொத்த திரையுலகமே அறிந்த விஷயம் தான்.

இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று வதந்திகள் பரவி வரும் நிலையில், விஜய் தேவரகொண்டா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக இளம் நடிகை அனிகா சுரேந்திரன் கூறி இருப்பது இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கீதா கோவிந்தம்’ போன்ற சூப்பர்ஹிட் படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் விஜய் தேவரகொண்டா.

சமீபத்தில் ‘கிங்டம்’ படத்தின் மூலம் வெற்றி கண்டுள்ளார். விஜய்யின் இந்த புகழே இளம் நடிகைகளை ஈர்த்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது கோலிவுட்டின் இளம் நடிகை அனிகா சுரேந்திரன் இணைந்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில், ‘உங்கள் செலிபிரிட்டி க்ரஷ் யார்?’ என்று தொகுப்பாளர் கேட்டபோது, அனிகா எந்தத் தயக்கமும் இன்றி, ‘எனது செலிபிரிட்டி கிரஷ் விஜய் தேவரகொண்டா’ என்று கூறியுள்ளார்.

அனிகாவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *